இருக்கண்குடியில் பாயும் வைப்பாறு உருவான வரலாறு

வைப்பாறு உருவான விதம்

சம்புகன் என்ற வேடனால் அயோத்தியில் வாழ்ந்த ஒருவன் இறந்தான். இதை கேள்விபட்ட ஸ்ரீராமர், வேடன் சம்புகனை கொன்றார். வேடனால் இறந்தவனை தன் சக்தியால் உயிர்பித்தார் ஸ்ரீராமர்.

இறந்தவனுக்கு மீண்டும் உயிர் தந்தாலும், வேடன் சம்புகனை கொன்றதால் ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்திதோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட சிவமலையில் இருக்கும் சிவபெருமானை நினைத்து, வணங்கி தவம் செய்து பாப விமோசனம் பெற்றார் ஸ்ரீஇராமர்.

தோஷங்கள் நீங்கியதால் பல சிவாலயங்களுக்கு சென்று தரிசித்து மீண்டும் அயோத்திக்கு திரும்பி செல்ல முடிவு செய்து பயணத்தை தொடர்ந்தார். வரும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை பக்கமாக வந்து சேர்ந்தபோது மாலை பொழுது ஆனதால், நீராடி, சிவவழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீராமர், தண்ணீரை தேடினார். ஆனால் அந்த மலைபகுதியில் எங்கும் தண்ணீர் இல்லை.

அப்போது அங்கு இருந்த ஒருவர் ஸ்ரீஇராமரிடம், “இராம.., அகத்திய முனிவர் புண்ணிய நதிகளை ஒன்று திரட்டி ஒரு குடத்தில் அடைத்து வைத்து, இந்த இடத்தில் புதைத்து வைத்திருக்கிறார். அகத்திய மாமுனிவர், காரணம் இல்லாமல் இதை செய்து இருக்கமாட்டார். நீங்கள் இந்த பகுதிக்கு வருவீர்கள் என்பதை அகத்தியர் அறிந்தே அப்படி வைத்துள்ளார்.” என்றார்.

இந்த வைப்பாறு, பல ஊர்களை சுற்றி வந்து அர்ஜுன நதியோடு இணைகிறது.

தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ஜுனன் ஆறு. இந்த இரு ஆறுகளும் கங்கை நதிக்கு இணையாக இருப்பதால் இந்த இடத்தில் அம்பாள் வீற்றிருக்க விரும்பினாள்.

Advertisements
irukkangudi Natural Farming

இயற்கை விவசாயம் உருவாக்குவோம்

இயற்கை விவசாயம் உருவாக்குவோம்
அன்பார்ந்த ஊர் பொதுமக்களுக்கும் மற்றும் இணையதள நண்பர்களுக்கும் முதற்க்கண் என் வணக்கம்..
இருக்கண்குடி கிராமத்திலும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் முன்னொறு காலத்தில் விவசாயம் தான் முதன்மை தொழில், ஆனால் இப்பொழுது விவசாயம் ஒரு நட்டம் தரக்கூடிய தொழிலாய் மாறியுள்ளது காரணம் நாம் நமது பாரம்பரிய விவசாய முறைகளை மறந்து சுயலாபத்திற்க்காகவும் அதிக லாபத்திற்க்காகவும் ஆசைப்பட்டு செயற்கை பூச்சிக்கெள்ளி மருந்துகளை பயன்படுத்தி நாம் நமது மண்ணையும் விதைகளையும் மலட்டு தன்மை கொண்டவையாய் மாற்றிவிட்டோம்.
நம் இயற்கை விவசாய முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள திருச்சியில் பசுமை விகடன் நடத்திய மாபெறும் கருத்தரங்கில் (12-02-2016) கலந்து கொண்டேன் அங்கு நான் கண்டவை என்னை வியப்பில் ஆழ்த்தியது.. நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன், எனது தந்தை மற்றும் சான்றோர் செய்யும் விவசாய முறைகளை நான் விவரம் தெரிந்த காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை பார்த்து வருகிறேன். எங்கள் விவசாயம் வயலை உழவு செய்வதை தவிர மற்ற அனைத்து வேலைகளுக்கும் மனித சக்தியே அதிகம் தேவைப்பட்டது ஆனால் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அங்கு வீற்றிருந்த விவசாயப் பண்ணைக்கருவிகளைப் பார்க்கையில் என் மனதிற்க்குள் வானளவ சந்தோசம் பொங்கியது. ஆனால் இன்றைக்கும் நிறய விவசாயிகளுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இருக்கின்றனவா இல்லையா.. என்று புரியவில்லை. இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்ப்படுத்தியது.
நமது முன்னோர்கள் காலத்தில் சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு போடுவது வழக்கம் ஆனால் இன்றைக்கு சாப்பிடும் முன்னும் சாப்பிட்ட பின்னும் கை நிறைய மாத்திரை மருந்துகளை உணவாய் உண்பது வேதனை தரக்கூடிய ஒன்று.. இதற்க்கு முக்கியக் காரணம் நாம் விவசாய முறைகளும் நமது உணவு முறைகளும் தான் என்பதில் எந்தவித அய்யப்பாடும் இல்லை. இயக்கையில் விளையக்கூடிய உணவுகளை தவிர்த்து குறிகிய காலத்தில் விளைவித்து அதை சாப்பிடுகிறோம்.
முன்பெல்லாம் ஊருக்கு ஒரு வைத்தியர் இருப்பர்.. ஆனால் இப்பொதோ தெருவுக்கு 4 கிளீனிக் வந்துவிட்டது.. தெருவுக்கு 4 பொறியாளர் இருக்கின்றாகள் ஆனால் 1 விவசாயியையும் பார்க்க முடிவதில்லை இப்போழுது.. நமது பெற்றோர் நல்ல படிக்கனும், வெளிநாடு போய் வேலை பார்க்கனும் அப்போ தான் நீயும் நல்லா இருப்ப உன் குடும்பமும் நல்லா இருக்கும் என்று சொல்லி சொல்லியே வளர்த்து விட்டனர். சற்று சிந்தித்துப் பார்த்தால் இது எவ்ளோ பெரிய முட்டள்தனம் என்பது புரியும்.
இயற்கை விவசாயத்திற்க்கு வருவோம்..
விவசாயத்திற்க்கு முக்கியமான தேவைகளில் ஒன்று தண்ணீர், மண்ணின் வளம், நம்முடைய மண்ணின் வளம் இப்போது உயிரற்றுக் கிடக்கின்றது,.. முதலில் மண்ணை வளப்படுத்த வேண்டும்.. நாம் மண்ணை முறையாக பரிசோதனை செய்து தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிற்க்கு வழங்கினால் போதுமானது.. சொட்டு நீர் பாசானம், திருந்திய வேளாண் வளிமுறைகளைப் பயன்படுத்தி நாம் விவசாயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிக பணம் செலவிடாமல் நல்ல மகசூலையும் பெற முடியும்..
மாற்றம் வேண்டும் நமது தலைமுறைக்கு…
வாள்க வளமுடன்..

Irukkangudi Village History

இருக்கண்குடி பெயர் உருவான விதம்

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்